கிரிக்கெட்:
தமிழில் மட்டை பந்து,துடுப்பு ஆட்டம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலமான ஒரு விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.இன்றைய கால கட்டத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என கேட்டால் அது கிரிக்கெட் என சொல்லும் அளவிற்க்கு கிரிக்கெட் இந்தியாவில் வளர்ந்து உள்ளது.
கிரிக்கெட் வரலாறு:
கிபி 16 மற்றும் 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உருவான ஒரு விளையாட்டு ஆகும்.ஆரம்ப கால கட்டத்தில் இந்த விளையாட்டு மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் ஆட்சி செய்த போது அவர்களுடன் ஒட்டுண்ணி போல இந்த விளையாட்டும் பல நாடுகளுக்கு சென்றது.அதில் மிக முக்கியமான ஒரு நாடு தான் நம் இந்தியா.இப்படி எங்கோ ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட்க்கு இன்று உலகில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
பொதுவாக இந்தியாவில் கிரிக்கெட் என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பூரிப்பு அடைந்துவிடுவார்கள்.ஏனென்றால் கிரிக்கெட் நம் நாட்டை சேர்ந்த ஒரு விளையாட்டு இல்லை என்றாலும் பாதியில் வந்து நம் ரத்தத்தில் கலந்து விட்டது.இதன் காரணமாக இந்தியாவில் கிரிக்கெட்க்கு என மிக பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு.உலக அரங்கில் கிரிக்கெட்யை ஒரு விளையாட்டாக பார்த்தாலும், நம் இந்தியர்கள் மட்டும் அதை தங்கள் உணர்வாக பார்த்து அடிமையாகி வாழ்க்கையை இழக்கிறார்கள்.
ஆரம்ப கால கட்டத்தில் கிரிக்கெட் என்பது இந்தியாவை பொறுத்த வரை பிராமணர்கள் மட்டும் விளையாடும் ஒரு ஆட்டமாகவே இருந்தது. இன்றும் கூட அவர்களுக்கே முன்னுரிமை வழங்கபடுகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாறை எடுத்து பார்த்தால் அதில் பல பேர் குறிப்பிட்ட பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.70 சதவிகிதம் பேர் பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் கிரிக்கெட்டில் இருப்பார்கள். மீதம் உள்ளவர்கள் சிங், ராஜ் புட்ஸ், இது போன்ற உயர் சாதியினர் ஆக இருப்பார்கள். sc மற்றும் st பிரிவில் இருந்து மிக மிக சொற்பமான பேரே கிரிக்கெட் ஆடி உள்ளனர்.
கிரிக்கெட்டால் அழிந்த விளையாட்டுகள்:
பொதுவாக உலக நாடுகள் கிரிக்கெட்டை பெரிதாக எடுத்து கொள்ளவிட்டாலும் இந்தியர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.இதன் விளைவு இந்தியாவில் கிரிக்கெட் மட்டும் தான் முன்னேறி உள்ளது கிரிக்கெட்டால் பல விளையாட்டுகள் அழிந்து போயும் உள்ளன.உதாரணமாக 1930ல் இருந்து 1980 வரை இந்தியாவில் பிரபலமான ஒரு விளையாட்டு ஹாக்கி ஆகும்.இந்த ஹாக்கி ஆட்டம் இந்தியாவின் தேசிய ஆட்டம் என்று சொல்லும் அளவிற்க்கு இருந்தது.மேலும் உலகில் மிக பெரிய விளையாட்டு போட்டி தான் ஒலிம்பிக் இந்த ஒலிம்பிக்கில் இந்தியா இது வரை 10 தங்க பதக்கம் மட்டுமே வென்று உள்ளது.அதில் 8 தங்க பதக்கங்கள் ஹாக்கியில் வென்றதாகும்.இப்படி உலக அரங்கில் ஹாக்கி இந்திய நாட்டிற்கு பெரும் புகழை வாங்கி தந்தது.ஆனால் 1983 ஆண்டு இந்தியா முதன் முதலில் கிரிக்கெட்டில் உலக கோப்பை வென்ற பின் கிரிக்கெட் மீது மதிப்பு கூடியது. இதன் விளைவு கிரிக்கெட் என்ற விளையாட்டு வணிகமாக மாற்றபட்டு பல விளையாட்டுகள் அழிந்து போயின அதன் விளைவு 150 கோடிக்கும் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவால் ஒலிம்பில் பதக்கங்களை வெல்ல முடியவில்லை.இந்தியவிற்கு 8 தங்கம் வாங்கி கொடித்த ஹாக்கி ஆட்டம் இன்று காணமல் போகி விட்டது.
மேலும் இன்று உள்ள ஊடகங்கள் அனைத்தும் கிரிக்கெட்டையே முன்னிலை படுத்துகிறது. இதன் விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகள் காணாமல் போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளன.இதில் கொடுமை என்னவென்றால் இந்தியாவில் ஒலிம்பிக்கில் சென்று ஆடிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது ஆனால் அதை கூட நாம் கண்டு கொள்ளாமல் கிரிக்கெட் என்ற ஒற்றை ஆட்டத்தை மட்டும் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம்.
கிரிக்கெட் எப்படி பிரபலமானது:
கிரிக்கெட் ஆரம்ப காலத்தில் கண்டு கொள்ளாத ஒரு விளையாட்டாக இருந்தாலும்,1983ல் இந்தியா உலக கோப்பை வென்ற பின்பு இந்தியர்கள் இடையே பரவ தொடங்கியது. அதன் பின்னர் அந்த கால கட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரச்சனை ஆரம்ப காலம் முதல் நிலவி வந்தது.இதற்கு இடையே கிரிக்கெட் இரு நாடுகளுக்கும் இடையே பிரபலமானது.மேலும் இந்தியா பாகிஸ்தான்க்கு இடையே விளையாட்டு நடைபெறும் பொழுது அதை இரு நாடுகளுக்கும் நடக்கும் போராகவே பார்த்தனர்.ஆம் கிரிக்கெட் எனும் விளையாட்டுகள் இன உணர்வு திணிக்கபட்டது இதன் விளைவு கிரிக்கெட் மேலும் பிரபலமானது.
மேலும் 2007ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட ipl கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகித்தது.அதிக படியான விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் பட்டி தொட்டி எங்கும் பரவியது. மேலும் ipl மூலம் இந்திய கிரிக்கெட் அபார வளர்ச்சி அடைந்தது. அந்த வளர்ச்சி கிரிக்கெட் எனும் விளையாட்டை ஒரு தொழில் ஆக மாற்றியது.
உலகில் உள்ள பல நாடுகள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக பார்த்த பொழுது இந்தியர்கள் மட்டும் அதை இன உணர்வாக பார்த்தனர்.இந்த இன உணர்வை இந்திய கிரிக்கெட் வாரியம் பணமாக மாற்றியது.கோடி கணக்கில் ஏலம், கண்ணை கவரும் விளம்பரம்,10 அணிகள் என கிரிக்கெட் வளர்ந்தது. இந்த வளர்ச்சியின் விளைவு இந்தியாவில் பல விளையாட்டுகள் அழிய காரணமாக இருந்தது. இவ்வளவு ஏன் பக்கத்து நாட்டில் லட்ச கணக்கான பேரை கொன்ற போது கூட நாம் ipl தானே பார்த்தோம் அந்த அளவிற்க்கு இந்த கிரிக்கெட் இந்தியர்களை முட்டாளக்கியது.
கிரிக்கெட் எனும் சூதாட்டம்:
நாம் தெரு ஓரங்களில் சீட்டு கட்டு ஆடி கொண்டு இருந்த போது அதை சூதாட்டம் என சொல்லி காவல் துறை நம்மை கைது செய்தது. ஆனால் அதையே இன்று நாம் smart phoneல் விளையாடும் போது brain game என்று அரசு சொல்கிறது.இந்தியாவில் ipl ஆரம்பம் ஆன பிறகு கிரிக்கெட் சூதாட்டம் அதிகமானது.இந்த அணி வெற்றி பெரும், இல்லை இந்த அணி வெற்றி பெறும் என தங்கள் பணத்தை வைத்து சூதாட்டம் தொடங்கியது.மேலும் கிரிக்கெட்க்கு உள்ளே இருக்கும் வீரர்களே பணத்தை வாங்கி கொண்டு தங்கள் அணிக்கு துரோகம் செய்து எதிரணியினை வெற்றி பெற வைத்த அவலமும் நடந்தது.இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் என்ற இரு அணிகளும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.இதன் பிறகு சூதாட்டம் டிஜிட்டல் மையம் ஆனது பல fantasy appகள் வெளிய வந்தது.அதில் சாமானிய மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பறி கொடுத்தனர்.வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி என்பது போல சூதாட்ட நிறுவனங்களே ipl கிரிக்கெட்டை தலைமை ஏற்று நடத்தியது. பல பேர் fantasy appகளை பதிவு இறக்கம் செய்து அதில் பல கோடிகள் கிடைக்கும் என பணத்தை போட்டு தெரு கோடிக்கு சென்றனர். ஏதோ ஒரு நாட்டிக் உருவான விளையாட்டு ஒரு சமூகத்தால் இந்தியாவில் விளையாடபட்டு,போலி இன உணர்வு திணிக்கபட்டு இன்றுஇந்த கிரிக்கெட்ல் ஒட்டு மொத்த இந்தியர்களும் தங்களது பணம் மற்றும் நேரத்தை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆம் கிரிக்கெட் எனும் சூதட்டத்தில் இந்தியர்கள் முட்டாள் ஆனார்கள்.
Read other articles:
0 Comments