தமிழக வரலாற்றில் ஏற்பட்ட கொடூர பஞ்சம் மற்றும் வறுமைகள்:
இந்த உலகில் மனித சக்தியை விட ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்றால் அது இயற்கை தான் மனிதனால் இயற்கையை ஒரு போதும் கட்டுபடுத்த இயலாது.தற்பொழுது கூட கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக மிக பெரிய வெள்ளபெருக்கு ஏற்பட்டது வயநாடு எனும் ஊரே அழிந்துவிட்டது. இயற்கையின் கோர தாண்டவத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இன்றோ நேற்றோ நடக்கவில்லை மனித இனம் உருவானாதிலிருந்து இதுவரை பல பேரழிவுகளை கண்டு உள்ளது அது புராணத்தில் வரும் நோவா கதைகளும்,அழிந்த நமது குமரிக்கண்டம்,பூம்புகார் போன்ற பல சம்பவங்களை குறிப்பிடலாம். இப்படி மிக பெரிய வெள்ளம் மற்றும் அழிவு ஏற்படும் போது அதன் பின் நாட்டில் மிக பெரிய பஞ்சங்கள் உருவாகும். அப்படி வரலாற்றில் ஏற்பட்ட சில பஞ்சம் மற்றும் வறுமைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
சங்க காலத்தில் பஞ்சம்:
சங்ககாலத்தில் காஞ்சிபுரத்தில் மழை பொய்த்து போனதால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அந்த நகரின் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டனர். அப்பொழுது பௌத்த துறவியாக இருந்த மணிமேகலை காஞ்சிபுரம் சென்று தன்னிடம் இருந்த அமுதசுரபி எனும் அக்ஷய பாத்திரத்தை பயன்படுத்தி மக்களுக்கு உணவு வழங்கினார். இவற்றை போல சிறுபஞ்சமூலத்தில் பஞ்சப் பொழுதைப்படுத்துண்பான் என்றும்,தனிபாடல் ஒன்றில் கலர் தட்டிய பஞ்சகாலத்திலே என்றும்,குமரேசசதகத்தில் கொல்லை தான் சாவிபோய்விட்டாலுமங்கு வரும் குருவிக்கு மேய்ச்சலுண்டு என்றும் வரும் தொடர்கள் மூலமாக சங்க காலத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள் நமக்கு தெரிய வருகிறது.
பல்லவர் காலத்தில் பஞ்சம்:
பல்லவர்காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் திருநாவுகரசர்,திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் திருவீழிமிழலையில் ஏற்பட்டு இருந்த கொடுமையான பஞ்சத்தை போக்க,அங்குள்ள சிவபெருமானிடம் முறையிட்டு,அவரிடமிருந்து தினமும் பொற்காசுகளை பெற்று,அம்மக்களின் பஞ்சத்தை போக்கியுள்ளனர்.இவற்றை போல பல்லவர் மற்றும் சாளுக்கியர்களுக்கு இடையே ஏற்பட்ட பல போர்களினால் தமிழநாட்டில் கடுமையான பஞ்சம் உருவாகின.
சோழர் காலத்தில் பஞ்சம்:
சோழர் காலத்தில் (கிபி 846 முதல் 1275)வரை ஏற்பட்டுள்ள பஞ்சம் பற்றி நமக்கு சுமார் 30 கல்வெட்டுகள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்த சொற்களை கொண்டு அறியமுடிகிறது. முதலாம் ராஜேந்தரசோழனின் இரண்டாம் ஆண்டு ஆட்சியாண்டில் கிபி 1014 சுற்றுக்குலையு மின்றி வெள்ளங்கொண்டமையில் சேதமாய்வருகையில் என்ற வரிகள் மூலமாக வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் சேதம் உண்டாயிற்று என அறிந்து கொள்ள முடிகிறது.
விக்கிரமாசோழனின் மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி 1121 இந்நெல்லால் முன்புசிறிது நிலம்விட்டு வாராநிற்க காலதோசத்தால் இந்நெல் இறங்கிக் கிடந்தமையில் அதாவது பருவநிலை பாதிப்பால் கொடுக்கவேண்டிய நெல் கொடுக்கபடாமல் இருந்தது என இந்த கல்வெட்டு வரிகள் கூறுகிறது. மேலும் இம்மன்னரின் 7 ம் ஆண்டு ஆட்சியில் கிபி 1125 பெரும்வெள்ளங்கொண்டு ஊரும்போகமும் அழிந்து,அர்த்தனபட்டு பெரிய வெள்ளம் வந்து ஊரில் விவசாயம் அழிந்து போனது என இந்த வரிகள் நமக்கு கூறுகிறது.இம்மன்னரின் 11 ம் ஆண்டு ஆட்சியாண்டில் கிபி 1129 காலம்பொல்லாதாய் நம்மூர் அழிந்து குடிஓடிப் போனமையில் அதாவது வறுமை ஏற்பட்டதால் ஊர் அழிந்து ஊரில் உள்ளவர்கள் ஊரை விட்டு வெளியேறினார்கள்.
இரண்டாம் ராஜராஜ சோழரின் 6ம் ஆட்சியாண்டில் கிபி 1152 நம்மூர் கால தோஷம் உண்டாகி என்றும் அதாவது ஊரில் பருவநிலை பாதித்து வறுமை உண்டாயிற்று. மேலும் இம்மன்னரின் 7 ம் ஆட்சியாண்டில் கிபி 1153 காலதோஷத்தாலும்,அக்கத் தாழ்ச்சியாலும்(பருவநிலை மாற்றம்,நாணயங்களின் வீழச்சி)மேலும் இம்மன்னரின் 14 ம் ஆட்சியாண்டில் எங்களூர் இவ்வாண்டு ஆவணிமாசத்தும்,புரட்டாசிமாசத்தும்,நீர்தட்டுபட்டு,ஒரு பூ நடபொறாமையாலும் ,நட்டவையும்,பயிர் எப்பாழாய் தட்டுபட்டமையில் இத்தட்டுக்குடலாக அதாவது எங்களூரில் இந்த வருடம் ஆவாணி மற்றும் புரட்டாசி மாதத்தில்லும்,தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டது,ஒரு போகம் நடவுகூட நடுவதற்கு முடியாமலும் நட்டுள்ள பயிர்களும் பாலாய் போகின்ற நிலையில் உள்ளது என கூறியுள்ளனர்.
மூன்றாம் குலோத்துங்க சோழரின் 23 ம் ஆட்சியாண்டில் கிபி 1201 காலம் பொல்லாத காலமாக (ஊரில் காலநிலை பாதிப்படைந்து வறுமை ஏற்பட்டது) இம்மன்னரின் 24 ம் ஆட்சியாண்டில் கிபி 1202 பஞ்சத்திலே காசுக்கு உழக்கு அரிசி விற்கச்சலே (பஞ்சத்தினால் காசுக்கு அரிசி விற்றனர்) என்ற வரிகள் மூலமாக குலோத்துங்க சோழரின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பற்றி நமக்கு கூறுகிறது.இதுமட்டுமில்லாமல் மேலே சோழர் காலத்தில் ஏற்பட்ட பல வெள்ளம் மற்றும் பஞ்சங்களை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
சோழர்கள் நீர் மேலாண்மையில் தலை சிறந்து விளங்கினார்கள் அப்படி இருந்துமே அவர்கள் ஆட்சியில் பல பஞ்சங்கள் உருவாகின. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கே இப்படி என்றால்,தொந்தியை வளர்த்து கொண்டு இருந்த வடுக நாயக்கர் ஆட்சியில் நாடு எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி மேலும் பார்க்கலாம்.
விஜயநகர அரசு மற்றும் நாயக்கர் ஆட்சி கால பஞ்சங்கள்:
இரண்டாம் வீரபுக்கன உடையார் கிபி 1404 ல் கல்வெட்டில் பஞ்சம் பற்றின செய்திகள் வந்துள்ளன. இதில் காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயம் சார்ந்த நிலங்களில் மணல்குவியல்கள் சேர்ந்தும்,கால்வாய்கள் உடைத்தும் பெரும் சேதம் உண்டாகின. இவற்றை பராமரிப்பதற்க்கு விவசாயம் செய்யும் உரிமை உடையவர்களுக்கும்,குத்தகைதாரர்களுக்கும் அரசாங்கம் வரி சலுகையும் கொடுத்து உள்ளது.
விசயநகர மன்னர் சாளுவநரசிங்கராச உடையார் காலத்தில் கிபி 1471 பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதில் அன்னமராசர் வழுதிலம்பட்டு சாவடி வடக்கடைந்த பற்றில் தனி ஊர் திருவாமாத்தூரில் பதினெட்டு ஆண்டுகளாக ஏரிகள் உடைந்தும்,கோயில்,மண்டபங்களும்,கோபுரங்களும்,மதில்சுவர்களும் விழுந்தும் கிடந்துள்ளன. இதற்காக ஊரில் குடிகளை கொண்டு வந்து குடியேற்றியும்,இவற்றை சரிசெய்தும் நரசிங்கராசரின் தருமத்தில் மீண்டும் நடைமுறைபடுதப்பட்டுள்ளன. இதை பத்தெட்டு காலமாக ஊர்கள் என்ற கல்வெட்டு வரிகள் மூலம் அறியமுடியும்.
இதுமட்டும் இல்லாமல் நாயக்கர் ஆட்சியில் ஏரி குளங்கள் முறையாக தூர்வாரா படவில்லை இதன் விளைவாக தமிழகத்தை குறுகிய காலகட்டதிலேயே பல முறை பஞ்சம் தாக்கியது. மக்கள் உணவுக்காக வீதியில் அழைந்தனர். 1622 முதல் 1770 வரை தமிழகத்தை 14 முறை பஞ்சம் தாக்கியது. அரசு பஞ்சத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை.
பஞ்சம் எல்லை மீறி சென்ற காரணத்தால் பாளையகாரர்கள் சத்திரங்கள் தொடங்கினார்கள். சத்திரத்திலும் சரியான உணவு கொடுக்கபடவில்லை கல்லும்,நெல்லும்,கலந்த சோறு வாடிபோன கத்தரிக்காய் அதில் உப்பில்லை, ஈக்கள் விழுந்து கிடந்தன என்று காளமேக புலவர் பாடுகிறார்.இதில் விவசாய குடிக்கலான பள்ளர் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கபட்டனர்.
நாயக்கர்களுக்கு பிறகு தமிழகம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு செல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் பதுக்கள்,சுரண்டல் மோசமான நிர்வாக திறன் காரணமாக தமிழக்கத்தை பெரும் பஞ்சம் தாக்கியது அது தாது வருட பஞ்சம் ஆகும்.
0 Comments