கேரளாவின் கேடுகெட்ட புத்தி முல்லை பெரியாறு  அணை வரலாறும் அரசியலும்:


கடவுளின் தேசம்:


         கடவுளின் தேசம் என்று அழைக்கபட கூடிய ஒரு மாநிலம் தான் கேரளா. காரணம் அளவில்லா இயற்கை வளங்களுடன் மரங்களும்,மலைகளும் சூழ்ந்த அழகான பகுதி ஆகும். இந்த கேரளா ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த பகுதி ஆகும். தமிழ் மன்னர்களான சேரர்கள் செங்கோல் ஊன்றி ஆட்சி செய்த நாடு கேரளா ஆகும்.கால ஓட்டத்தில் சேரர்கள் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரபட்டது. தமிழ் மொழி திட்டமிட்டு அழிக்கபட்டு மலையாளம் என்ற புதிய மொழி உருவாக்க பட்டது. தமிழ் மக்கள் சிறுபான்மையினர் ஆக்கபட்டனர். இன்று வெளியில் இருந்து வந்த  நம்பூதிரிகளும்,நாயர்களும் கேரளவினை ஆட்சி செய்கின்றனர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைபடுத்தி ஆட்சி செய்து அவர்களிடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்த பின்பு மலையாளத்தையும்,மலையாளிகளையும் மையமாக கொண்டு கேரளா என்ற தனி மாநிலம் உருவானது. தமிழ் மக்கள் கேரளா மக்களை ஒரு போதும் எதிரிகளாக பார்த்தது இல்லை. ஆனால் கேரளா அரசும் மக்களும் தமிழர்களை எதிரிகள் போலவே பார்த்து வஞ்சித்தும் வருகின்றனர்.74 ஆண்டு கால தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அறியாத அரசியல் மற்றும் வரலாறை இப்பொழுது பார்க்கலாம். 

எல்லை பிரிப்பு:


tamilnadu vs kerala
தமிழ்நாடு எல்லை பிரிப்பு 


          இந்தியா விடுதலை அடைந்த பின்னர் இந்தியாவில் இருந்த பல மொழி பேசும் மக்களும் தங்களுக்கு என்று தனி மாநிலம் வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். இதன் விளைவாக இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாகின. இந்நிலையில் அன்று மெட்ராஸ் மாகாணம்,திருவதாங்கூர் சமஸ்தானம் என்று இருந்த பகுதி தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்நாடகா என மாநிலங்களாக மாறியது. இப்படி மாநிலங்கள் உருவானபோது மாநிலங்களுக்கு இடையே எல்லைகள் பிரிக்கபட்டன. அந்த சமயத்தில் தமிழகத்தின் பல பகுதிகள் ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்றது. சென்றது தமிழநாட்டு பகுதிகள் மட்டும் இல்லை உரிமைகளும் தான்.இந்நிலையில் 1953 ம் ஆண்டு மாநில எல்லைகளை வரையறுக்க பசல் என்பவர் தலமையில் பசல் அலி கமிஷன் எனும் ஆணையம் அமைக்கபட்டது. இதன் உறுப்பினர்கள் பசல் அலி,கே. ம் பணிக்கர் என்ற மலையாளி,hn குன்சுரு ஆகிய மூவரும்.திருவதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த பெரும்பான்மையான மக்கள் தமிழர்கள் ஆவார்கள். ஆனால் மலையாளிகள் திருவதாங்கூர் சமஸ்தானத்தை கேரளவுடன் தான் இணைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் வெகுண்டு எழுந்த தமிழர்கள் போராட துவங்கினார்கள். போராட்டத்தை ஒடுக்க நினைத்த கேரளா அரசு 1954 ஆகஸ்ட் 11 ம் தேதி தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 11 தமிழர்கள் கொல்லபட்டனர். மேலும் தமிழநாட்டுக்கு முறையே வரவேண்டிய தோவானை,அகத்தீஸ்வரம்,கல்குளம்,விளவங்கோடு,நெய் ஆற்றின் தென்பகுதி,நெடுமாங்காடு கீழ்பகுதி,செங்கோட்டை,தேவிக்குளம்,பீர் மேடு,பாலக்காடு ஆகிய பகுதிகள் கேரளாவிடம் சென்றன. அன்றைய எல்லை பிரிப்பின் போது தமிழ்நாடு கேரளவிடம் இழந்த பகுதிகளின் அளவு 12,219 சதுர கிமீ ஆகும். மேலும் கன்னியாகுமரி,செங்கோட்டை ஆகிய பகுதிகளும் கேரளவிற்க்கு சென்றன. ஆனால் தமிழகத்தின் மேற்கு எல்லை மீட்பார்களான மார்ஷல் நேசமணி,கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோர் போராடி கன்னியாகுமரி,செங்கோட்டை ஆகிய பகுதிகளை மீட்டு எடுத்தனர்.இதில் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முக்கிய பகுதியான இடுக்கி கேரளவிடம் சென்றது.இப்படி தமிழக கேரளா எல்லை பிரிப்பின் போது கேம் பனிக்கர் என்ற மலையாளி துணையோடு தமிழ்நாட்டுக்கு முறையே வரவேண்டிய பல பகுதிகளை கேரளா அபகரித்து கொண்டது.ஆனால் கேரளா அரசு இதோடு நிறுத்தி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தமிழர்களை சீண்டி கொண்டும்,தமிழர்களுடன் பிரச்சனை செய்து கொண்டும் தான் இருக்கிறது.

முல்லை பெரியாறு அணை பிரச்சனை:

      தமிழ்நாடு எல்லை பிரிப்புக்கு பிறகு கேரளா கையில் எடுத்த பிரச்சனை முல்லை பெரியாறு அணை பிரச்சனை.முல்லை பெரியாறு அணை ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டபட்ட ஒரு அணையாக்கும். பொறியாளர் பென்னி குவிக் தனது சொத்துக்களை விற்று கட்டிய ஒரு அணை தான் முல்லை பெரியாறு அணை ஆகும்.இந்தியா விடுதலைக்கு பிறகு கேரளா அரசும்,ஊடகங்களும் இந்த அணையை வைத்து பிரச்சனை செய்து வருகிறது. தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கவே கூடாது என்ற போக்கில் கேரளா அரசு கையில் எடுத்த முடிவு தான் முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் என்ற முடிவு.1962 ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் நாளிதழில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது இடியும் நிலையில் உள்ளது என செய்தி வெளியானது. இதனையடுத்து தமிழக அரசும்,கேரளா அரசும் இணைந்து 1964லில் அணையை சோதனை செய்து அணை பாதுகாப்பாக தான் உள்ளது என இரு மாநில அரசுகளும் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் 1979 ம் ஆண்டு கேரளா நாளிதழ் எந்த ஒரு ஆதாரமும் இன்றி அணை பலவீனமாக உள்ளது. அணையை இடித்து விட்டு புதிய அணையை கட்டவேண்டும் என செய்தியை வெளியிட்டது. இதன் பின்பு அணையை சோதனை செய்தனர் ஆனால் அணையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருப்பினும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்தனர். இது ஒரு தற்காலிக ஒப்பந்தம் ஆகும். பிறகு 2001 ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தலாம் என அறிவிக்கபட்டது. இப்படி அணை இன்றும் பலமாக இருந்தாலும் கேரள அரசும்,மக்களும் அணை பலவீனமாக உள்ளது அதை இடித்து கட்டவேண்டும் என முடிவில் உள்ளனர். இந்த முடிவிற்கு பின்பு உள்ள ஒரே காரணம் தமிழர்களுக்கு தண்ணீர் தர கூடாது என்ற காரணம் தான். இந்த முல்லை பெரியாறு அணையினை நம்பி தமிழ்நாட்டில் தேனி,சிவகங்கை,திண்டுக்கல்,ராமநாதபுரம்,மதுரை என 5 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் கேரளா அரசு அணையை இடித்து கட்டினால் இந்த 5 மாவட்டங்களும் பாலைவனமாக மாறிவிடும். கேரளா அரசு இதோடு நிறுத்தி கொள்ளாமல் கொல்லம் ஆற்றின் குறுக்கே அணையை கட்டி தமிழகத்துக்கு வரவேண்டிய நீரை தடுத்தது. தற்பொழுது சிலந்தியாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளது. சிலந்தியாற்றில் அணை கட்டினால் அமராவதி ஆற்றிற்கு நீர் வரத்து குறையும்,இதனால் 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கபடும். இப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீரே தர கூடாது என முடிவில் உள்ளது கேரளா அரசு.

தமிழ்நாடு குப்பை தொட்டி:

  நம் தமிழர்கள் கேரளாவை கடவுளின் தேசமாக பார்த்தால் கேரளா நம் தமிழ்நாட்டினை ஒரு குப்பை தொட்டியாக தான் பார்க்கிறது.தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை பகுதியில் கேரளா மக்கள் தங்கள் மாநிலத்தில் வெளியேறும் மருத்துவ கழிவுகள்,இறைச்சி கழிவுகள் போன்ற பல கழிவுகள் நம் தமிழ்நாட்டின் எல்லை பகுதியில் கொட்டி ஒரு பக்கம் தமிழ்நாட்டினை குப்பை தொட்டியாக மாறிவருகிறது. இதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி அதை கேரளாவில் துறைமுகம் கட்ட கொண்டு செல்கிறார்கள். நமக்கு ஒரு சொட்டு நீர் கூட தர கூடாது என நினைக்கும் கேரளா அரசுக்கு நம் மாநிலம் நம் மாநிலத்தில் இருந்து மீண்டும் கிடைக்காத மலைகளை வெட்டி கேரளாவிற்க்கு அனுப்புகிறது. 


kanniyakumari
கன்னியாகுமரி மலை உடைப்பு 


அண்மையில் கேரளா வயநாட்டில் பெரும் நிலசரிவு ஏற்பட்டு 500 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்க்கு நம் தமிழக அரசும் பல பிரபலங்களும் நிதி உதவி செய்தனர். ஆனால் சில மலையாளிகள் தமிழ்நாட்டினார் கொடுக்கும் நிதியை நம்பி ஏமாற வேண்டாம். விரைவில் முல்லை பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும். இல்லை என்றதால் வயநாட்டினை போல இடுக்கியும் பாதிக்கபடும் என சில அறிவில்லாதவர்கள் சமூக வலைதளங்களில் பொய் கருத்துகளையும் பரப்பி வருகின்றனர். நாம் எல்லை பிரிப்பின் போது கேரளாவிடம் அதிக பகுதிகளை இழந்ததன் விளைவு இன்று நாம் நம் அடிப்படை உரிமைக்கு கூட அவர்களை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் உள்ளோம்