காங்கோ:
DRC(democratic republic of cango) காங்கோ ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிக பெரிய நாடு ஆகும்.ஆப்பிரிக்கவின் இரண்டுவது பெரிய நதி காங்கோவில் ஓடுகிறது.பொதுவாக நம் ஊரில் மண்னை தோண்டினால் நீர் வரும்.அரேபிய நாடுகளில் தோண்டினால் எண்ணெய் வரும்.அது போல இந்த காங்கோ நாட்டில் மண்னை தோண்டினால் பல கனிம வளங்கள் கிடைக்கும்.இன்னும் சொல்லப்போனால் என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் என்பதை போல இந்த நாட்டில் இல்லாத வளமே இல்லை.தங்கம்,கச்சா எண்ணெய், கோல்டன் என பல கனிம வளங்கள் இந்த நாட்டில் கிடைக்கும்.இந்த நாட்டில் உள்ள கனிம வளங்களின் மதிப்பு தோராயமாக 20 பில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும்.ஆனால் என்னதான் பல வளங்கள் இங்கு இருந்தாலும் ஏழ்மையில் முதல் இடத்தில் இருக்கும் நாடு என்றால் அது காங்கோ தான்.இங்கு கிடைக்குமஅளவில்லா கனிம வளங்களை கொண்டு காங்கோவை ஒரு பணக்கார நாடக மற்ற முடியும் ஆனால் உள்நாட்டு போர் மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்டதால் இன்று ஏழ்மையான நாடக உள்ளது.
காங்கோவின் இயற்கை வளங்கள்:
காங்கோ நாடு என்ன தான் ஒரு ஏழ்மையான நாடக இருந்தாலும் உலக நாடுகள் காங்கோ மீது ஒரு பாசம் வைக்கம்.குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா. பாசம் வைக்க காரணம் அனுதாபம் இல்லை அங்கு உள்ள இயற்கை வளங்கள் ஆகும்.காங்கோவில் உள்ள இயற்கை வளங்களை சுரண்ட உலக வல்லரசுகள் போட்டி போடுகிறார்கள். காங்கோவில் அதிகம் கிடைப்பது தங்கம் மற்றும் கோல்டன் ஆகும்.உலகில் கோல்டன் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருப்பது காங்கோ ஆகும்.கோல்டன் என்றால் என்ன அதன் பயன் என்ன??கோல்டன் என்பது கொலம்பைடு மற்றும் டான்லைட்டு என்ற கனிமங்களின் கலவை ஆகும்.இந்த கோபால்ட் batteryகளில் அதிகம் பயன்படுத்தபடும் ஒரு பொருள் ஆகும்.இன்றைய கால கட்டத்தில் அனைத்து மின் சாதன பொருட்களும் batteryயில் தான் இயங்குகிறது.உலகில் batteryக்கு மிக பெரிய சந்தை உண்டு இதனால் இந்த battery செய்ய பயன்படும் கோல்டன்க்கு அதிக மதிப்பு உண்டு.இதனால் கோல்டன் அதிகம் கிடைக்கும் காங்கோவின் மீது உலக நாடுகள் ஒரு கண் வைத்து உள்ளது.காங்கோவில் உள்ள ஏராளமான கோல்டன் சுரங்கங்களை சீனா நாடு தான் வைத்து உள்ளது.காங்கோவில் உள்ள 80 சதவிகிதம் சுரங்கங்கள் சீனாவின் கட்டுபாட்டில் தான் உள்ளது.சீனாவின் கால் பட்ட நாடு சுடுகாடாக மாறி விடும்.சீனாவின் கால் காங்கோ மீது பட்டதால் காங்கோ இன்று சுடுகாடாக மாறிவிட்டது. காங்கோவில் இருந்து அதிக இயற்கை வளங்களை சீனா சுரண்டி காங்கோவில் இருந்து 80 சதவிகித கோல்டானை ஏற்றுமதி செய்கிறது.
Is cobalt mines congo owned by china?
இந்த கோல்டன் என்ற கனிம பொருள் மனித உயிருக்கு ஆபாத்தான ஒரு கனிமம் ஆகும்.இந்த கோல்டன் மூலம் புற்றுநோய் கூட வரும் அந்த அளவிற்க்கு நச்சு தன்மை கொண்டது கோல்டன்.காங்கோவில் உள்ள கோல்டன் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு பல பாதிப்புகளை உண்டு செய்கிறது.முறையான பாதுகாப்பு இல்லாமல், எந்த ஒரு நவீன இயந்திரங்கள் இல்லாமல் வெறும் கையால் கோல்டனை எடுக்கும் அவல நிலை அங்கு உள்ளது.வயிற்று பசிக்காக கோல்டன் சுரங்கத்தில் வேலை பார்க்கும் பலருக்கு பல கொடிய நோய்கள் வருகிறது.
சீனா போன்ற நாடுகள் இங்கு இருந்து வளங்களை சுரண்ட மட்டுமே நினைக்கிறது.அங்கு உள்ள மக்களை கண்டு கொள்ளவில்லை. அதே போல அந்த நாட்டு அரசும் ஊழலுக்கு அடிமையாகி சீனாவின் கையில் பொம்மை ஆகிவிட்டது.இன்று நாம் smart phone பயன்படுத்துகிறோம் என்றால் காங்கோவில் ஒருவர் பாதிக்க படுகிறார்.முறையான பாதுகாப்பு இல்லாமல் சுரங்கத்தில் சிக்கி பலர் இறந்து போகிறார்கள். பலர் தினம் தினம் நச்சு தன்மை கொண்ட கோல்டன் உடன் வாழ்ந்து மெல்ல மெல்ல புற்று நோய்க்கு வழி கொடுக்கிறார்கள்.
போட்டி போடும் அமெரிக்கா மற்றும் சீனா:
காங்கோவில் ஒரு மிக பெரிய போட்டி நடக்கிறது.அது என்னவென்றால் அங்கு உள்ள வளங்களை நீ சுரண்டுவதா இல்லை நான் சுரண்டுவதா என்று.காங்கோ நாட்டில் சீனா ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.அங்கு இருந்து அதிகபடியான வளங்களை சுரண்டுகிறது.இந்நிலையில் அமெரிக்கா battery உற்பத்தியில் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது. battery செய்ய தேவையான மூல பொருள் கோல்டன் கோல்டன் அதிகம் கிடைக்கும் நாடு காங்கோ. ஆனால் காங்கோவில் ஏற்கனவே சீனாவின் ஆதிக்கம் உள்ளது.இந்நிலையில் அமெரிக்கா அதன் சித்துவிளையாட்டை ஆரம்பித்து விட்டது. ஆம் காங்கோ ஏற்கனவே இரண்டு உள்நாட்டு போர்களை சந்தித்து மிக பெரிய வறுமையில் உள்ளது.இந்நிலையில் அங்கு உள்ள வளங்களை சுரண்ட மீண்டும் ஒரு உள்நாட்டு போரை மறைமுகமாக துவங்கி உள்ளது.காங்கோ நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒரு முக்கியமான அமைப்பு M23 எனும் மர்ச்சி23 அமைப்பு ஆகும்.இவர்களுக்கு ஆரம்ப காலம் முதலே ருவாண்டா நாடு ஆதரவு தருகிறது. இந்நிலையில் இந்த M23 அமைப்புக்கு ருவாண்டா மூலம் மறைமுகமாக உதவி செய்து போராட்டத்தை தூண்டிஉள்ளது. M23 அமைப்பும் காங்கோ நாட்டினுல் அத்து மீறி நுழைந்து குறிப்பாக கோல்டன் சுரங்கம் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தி அந்த பகுதிகளை கைப்பற்றி வருகிறது. காங்கோ அரசும் M23 அமைக்கு ருவாண்டா மற்றும் அமெரிக்கா நாடு மறைமுக ஆதரவு கொடுப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.
காங்கோ ஏற்கனவே 2 உள்ளாட்டு போர்கள்,ஊழல், பசி, பஞ்சம் இப்படு பலவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் M23 அமைப்பு தாக்குதல் நடத்தி அங்கு உள்ள மக்களை கொடுமைபடுத்தி வருகிறது.உலக வல்லரசு நாடுகளின் போட்டியால் இந்த காங்கோ நாடு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த ஆப்பிரிக்கா நாடுகளே பாதிக்கபட்டு உள்ளது.உலகில் அனைத்து வளங்களும் இருந்தும் ஆப்பிரிக்கா நாடுகள் இன்றும் ஏழ்மையில் முதல் இடத்தில் இருக்கிறது.காரணம் படிப்பறிவு குறைவு மற்றும் ஊழல் அரசியல்வாதிகளால் தான்.
0 Comments