முதலிரவுக்கு வரி கட்டிய தமிழர்கள்:
நம்முடைய நாட்டில் இன்றும் சரி அன்றைய காலத்திலும் சரி வரிகள் என்பது இருந்துகொண்டு தான் இருக்கிறது. நம் நாடு இதுவரை பல வினோத வரிகளை கண்டுள்ளது அதிலும் ஒரு வினோதமான வரிதான் முதலிரவு வரி.முதலிரவு திருமணம் முடிந்த பிறகு கணவன் மனைவி இணைய நடக்கும் ஒரு போராட்டம் ஆகும்.இந்த முதலிரவுக்கு நம்முடைய பண்டைய தமிழர்கள் கட்டிலேறுதல் எனப்படும் ஒரு வரியை கட்டியுள்ளனர் அதை பற்றி காணலாம்.
யார் இந்த மூவேந்தர்கள் மூவேந்தர்கள் உருவான வரலாறு
கட்டிலேறுதல்:
கட்டிலேறுதல் என்ற சொல்லுக்கு கல்யாணம் செய்துகொண்டுள்ள புதுமண தம்பதிகளுக்கு நடக்கின்ற முதலிரவு சடங்கு என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிகளை பற்றி சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் ராஷ்ட்ரகூட மன்னர்கள் கல்வெட்டில் சில குறிப்புகள் கிடைதுள்ளன. இதனை பாண்டிசேரியில் உள்ள பாகூர் மூலேஷ்வரர் கோயிலுள்ள மூன்றாம் கண்ணரதேவரின் 22 ம் ஆட்சியாண்டில் (கிபி 961) வேசாலிப்பாடி வடகரை வாகூர் நாட்டிலுள்ள மன்றாடிகள் முதலிரவு சடங்கு நடதுகின்ற பொழுது வாகூர் மூலேஷ்வரர் கோயிலுக்கு ஒரு ஆடு ஒன்றினை வரியாக கொடுத்துள்ளதை நாம் அறியமுடிகிறது. இதில் வேறுநாட்டில் இருந்து பாகூர்நாட்டுக்கு வந்துள்ள மன்றாடி ஒருவன் கட்டிலேறும் போது இந்தநாட்டில் உள்ள கோவிலுக்கு ஒரு ஆடு வரியாக கொடுக்கவேண்டும் என்று சொல்லபட்டு உள்ளதை கொண்டு நாம் அறியமுடிகிறது. இதன் படி யார் ஒருவர் ஒரு ஆடு வரியாக கொடுக்கவில்லையோ அவர்களிடமிருந்து,திருக்கோயிலிலுள்ள கணபெருமக்களுக்கும்,தேவரடியார்களுக்கும் கட்டில் ஏறுபவர்களிடம் இரண்டு ஆடுகளை தண்டமாக வசூலிதுள்ளனர்.
இரண்டாம் ராஜேந்திர சோழனின் (கிபி 1056) 4 ம் ஆட்சியாண்டில் அண்ணல்வாய்கூற்றதில் இருந்த வியாபாரி அருள்மொழி செட்டி என்பவனுக்கும்,ராமன்மகள் செட்டிச்சிக்கும்,முதல் இரவு சடங்கு நடை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதை கொண்டு அறியமுடிகிறது. இதில் கட்டிலேறுகின்ற சமயத்தில் தில்லைக்கூத்தனும்,இன்னும் பிறரும் ஏதோ காரணதிற்காக ராமன் மகள் செட்டிச்சியை திட்டியுள்ளனர். இதனால் மனம் உடைந்து போன செட்டிச்சி நஞ்சு குடித்து இறந்துவிட்டாள் என்பதை இந்த கல்வெட்டு வாயிலாக நாம் அறிய முடிகிறது.
சதிராட்டம் எனும் பரதநாட்டியம் நாட்டியத்தின் வரலாறு
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கோயிலுக்கு தானம் கொடுக்கவேண்டும் என்பதை முதலாம் குலோத்துங்க சோழனின் 43 ம் ஆட்சியாண்டில்(கிபி 1113) திருவாய்பாடிநாட்டார்களும் மன்றாடிகளும் ஒரு ஆண் முதலிரவுக்கு செல்லும் பொழுது,கரூர் பெருமாள் கோயிலுக்கு ஒரு செம்மறி ஆடு ஒன்றினை வரியாக கொடுக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளதை அறியமுடிகிறது.
முதலிரவு நடந்த பின்னர் தம்பதிகளுக்கு மகப்பேறு வேண்டும் என்பது இயல்பான மரபாகும் .மக்கள்பேறு வேண்டுதல் என்பது,குழந்தை பெற்றுக்கொள்ளுவதற்க்கு இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் முறையாகும். இத்தகைய நிகழ்ச்சிகள் பற்றி இரண்டு கல்வெட்டுகளில் குறிப்பு வந்துள்ளன.
இதனை முதலாம் குலோத்துங்க சோழனின் 14 ம் ஆட்சியாண்டில் (கிபி 1084) ராஜேந்திரசோழவளநாட்டிலுள்ள திருமுனைபாடி பெருகனூர் நாட்டில் வாசித்த கூடலூர் உடையான் முனையன் மோகனான ராஜேந்திரசோழ காடவாராயன் என்பவர் தமக்கு ஆண் குழந்தை பிறந்தால் 100 கழஞ்சு பொன் தானம் கொடுப்பதாக மேலூர் நாட்டு தேவதானம் திருநாவலூர் சிவபெருமானிடம் வேண்டிகொண்டுள்ளதை அறியமுடிகிறது.
இம்மன்னரின் 49 ம் ஆட்சியாண்டில் (கிபி 1119) மிலாடன ஜனநாத வளநாட்டு குறுக்கை கூற்றத்து பிரம்மதேயம் சிற்றிகூர் திருப்புலிபகவதேவர் கோயிலில் பணிபுரிகின்ற சிவபிராமனரில் பார்த்வாசி கோத்திரத்தை சேர்ந்த பஞ்சனதி பெரியான் என்பவனுக்கு ஆண்பிள்ளை பிறந்தால் அப்பிள்ளையை கடவுளிடம் அருள்பெற்றுக்கொண்டு,அதன் நன்மைக்காக ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்க்கு 32 பசுக்களை வாங்குவதற்க்கு 10 அன்றாடு நற்காசுகளை அக்கோயில் சிவபிராமணர்களிடம் கொடுத்துள்ளதை கொண்டு அறியமுடிகிறது.
மேற்கண்ட கல்வெட்டு குறிப்புகள் மூலமாக நம்முடைய பண்டைய தமிழகத்தில் ஆண்பிள்ளையை பெருவதற்க்கும்,பெற்றுக்கொண்டதற்க்கும் இறைவனுக்கு தானம் செய்யும் பழக்கம் இருந்துள்ளதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஓட்டுமொத்ததில் திருமணம் செய்கின்ற சடங்குமுறைகளும்,அவற்றின் முறையில் பல பெயர்களில் அழைக்கபட்டுள்ளதையும்,அந்தமுறைகளுக்கு அந்தந்த நிர்வாகமே தீர்மானம் செய்து வரி வசூல் செய்துகொண்டுள்ளதையும் அறியமுடிகிறது. மேலும் மணமக்கள் தங்களுக்கு பிள்ளை வேண்டும் என்பதற்காகவும்,ஆண் பிள்ளை பிறந்தால் அதற்கு நேர்த்திக்கடன் செய்வதற்க்கு இறைவனிடம் வேண்டிக்கொண்டு,வேண்டுதல்களை நிறைவேற்றியுள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றுடன் கல்வெட்டுகளில் மணவாட்டி,பெண்டாட்டி,அகமுடையாள்,சானி,தாலியும்,தாலிகயிரும்,திருமாங்கலியம்,புனிதகயிறு முதலிய சொற்க்கள் வந்துள்ளதை காணமுடிகிறது.
0 Comments