தமிழக லச்சினை சின்னம் உண்மை வரலாறு:
இந்தியாவில் உள்ள ஒரு ஒரு மாநிலத்திற்கும் தனி தனி சின்னங்கள் உண்டு அதில் நம் தமிழ்நாட்டின் மாநில சின்னத்தில் மட்டும் தான் இந்திய த்தேசிய கொடி,அசோக சின்னம் என அனைத்தும் இருக்கும்.இப்படி சிறப்பு வாய்ந்த சின்னத்தை வரைந்து கொடுத்தவர் ஆர்.கிருஷ்ணா ராவ் என்பவர் இவர் மதுரையை சேர்ந்தவர்.இப்படி புகழ் மிக்க இந்த சின்னத்தில் ஒரு பெரும் பிழை இருக்கிறது. இல்லை சின்னத்தில் பிழை இல்லை அதை பிழையாக மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.ஆம் தமிழக லச்சினையில் இருக்கும் கோவில் கோபுரம் என்றதும் அனைவருக்கும் நியாபகம் வருவது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ஆகும்.ஆனால் உண்மை என்னவென்றால் அந்த கோவில் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் இல்லை அது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மேற்கு கோபுரம் ஆகும்.
1949ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வர் ஆக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இவர் ஆட்சியின் போது நேரு மாநிலங்களுக்கு என தனி சின்னம் வேண்டும்.எனவே ஒரு ஒரு மாநிலமும் உங்களுக்கான லச்சினையை நீங்களே கொடுங்கள் என கேட்டார்.இதனால் அன்றைய முதல்வர் ராமசாமி ரெட்டியார் மதுரையில் இருந்த கிருஷ்ணா ராவ்வை சந்தித்து தமிழக மாநிலத்துக்கு என தனி சின்னம் வேண்டும் நீங்கள் தான் வரையவேண்டும் என கேட்டு கொண்டார். இந்நிலையில் கிருஷ்ணா ராவ் லச்சினையை வரைந்தார்.லச்சினையில் உள்ள கோபுரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் ஆகும்.அவர் ஏன் அந்த கோபுரத்தை வரைந்தார் என்றால் அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் தான் இருந்தார்.தினமும் அந்த கோபுரத்தை பார்த்ததால் தான் என்னவோ அதையே சின்னமாக வரைந்தார். ஆனால் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோபுரத்தை வரைய பிற்காலத்தில் அதை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலாக மாற்றி கொண்டனர்.இதனால் உண்மை மறைக்கப்பட்டு இன்று நாம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தான் என நம்பி கொண்டு இருக்கிறோம்.
மதுரை கோபுரம் தான் என்பதற்குஆதாரம்?
இந்த இடத்தில் அனைவரும் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம்.அதற்கு சில ஆதராங்கள் இருக்கிறது.ஒரு முறை விகடன் பத்திரிகையில் இருந்து கிருஷ்ணா ராவ்வை நேர்காணல் எடுத்தனர்.அதில் சென்னை கோட்டையில் அமைச்சர்கள் மந்திராலோசனை செய்யும் அறை உள்ளது.அதில் இவருடைய ஆறு ஓவியங்கள் இருக்கிறது.அதில் ஐந்து மதுரையை காட்டுபவை ஏன் தமிழக அரசின் ராஜாங்க முத்திரையில் உள்ள கோபுரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம் தான் என அவரே அந்த நேர்காணலில் கூறி இருப்பார்.இந்த நேர்காணல் கோபுரம் தந்த கலைஞன் என்ற தலைப்பில் வெளியானது.
மேலும் தமிழக அரசின் அதிகார பூர்வ இணையதளத்தில் கூட 1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரித்த போது காமராஜர் தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுர சின்னத்தை தேர்வு செய்தார். ஆனால் அதை வடிவமைத்த கிருஷ்ணா ராவ் அது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் தான் என கூறினார் என்று இருக்கும்.மேலும் அண்மையில் கிருஷ்னா ராவ்வின் மகன்கள் கொடுத்த நேர்காணலிலும் அப்பா மதுரை கோவிலை மையப்படுத்தி தான் அந்த சின்னத்தை வரைந்தார் என கூறி இருப்பார்கள்.எனவே தமிழக லச்சினை பதக்கத்தில் உள்ள கோவில் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் இல்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகும்.
0 Comments