சாதிகள் உருவான வரலாறு:
"சாதி" இந்த சாதி என்ற சொல்லானது சிலருக்கு கெட்டவார்த்தை போன்று இருக்கலாம்.சிலருக்கு கவுரவமாகவும் இருக்கலாம்.இன்றைய கால கட்டத்தில் சாதியை ஒழிக்க வேண்டும் என பல இயக்கங்கள் போலியாக போராடி கொண்டு இருக்கின்றனர்.
"சாதிகள் இல்லையடி பாப்பா"
"சாதி தான் சமூகம் என்றால் வீசும்
காற்றில் விஷம் பரவட்டும்"
![]() |
சாதிய படிநிலைகள் |
இது போன்ற ஆவேச வசனங்கள் பேசி சாதியை ஒழிக்க வேண்டும் என்று சாதியை பற்றி புரிதல் இல்லாமல் பேசிகொண்டு இருக்கிறார்கள்.உண்மையில் சாதி இல்லாமல் மனித நாகரிகம் வளர முடியுமா? இல்லை இந்த சாதியை அடியோடு ஒழிக்க முடியுமா?மேலும் சாதியை பற்றி பல அறியாத விஷயங்களை பார்க்கலாம்.
மேற்கத்திய நாடுகளில் சாதி:
சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் முதலில் கூறும் வார்த்தையானது மேற்கு உலக நாடுகளை பாருங்கள் சாதி சண்டை இல்லாமல் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று கூவுவார்கள்.பகல் மற்றும் இரவு, வட துருவம் மற்றும் தென் துருவம், நாணயத்தில் பூ மற்றும் தலை என அனைத்திலும் இரண்டு பக்கங்கள் உள்ளது.அது போல தான் அரசன் என்று ஒருவன் இருந்த போது அடிமை என்று பலர் இருந்தனர். உலகில் எங்கெல்லாம் அரசு ஆட்சி நடந்ததோ அங்கெல்லாம் அடிமைகளும் சாதி எனும் கட்டமைப்பும் இருந்தது.ஆம் மேற்கு உலக நாடுகளிலும் சாதிகள் இருந்தது சாதி மட்டும் இல்லாமல் ஒரு படி மேலாக நிற வேறுபடும் இருந்தது. வெள்ளை நிறம் உடையவர்கள் மேலானோர் கருப்பு நிறம் கொண்டவர்கள் கீழானவர்கள் என்ற பாகுபாடு இருந்தது. அதனால் தான் கருப்பு தோல் கொண்ட இந்தியர்கள், ஆப்பிரிக்கர்களை ஆங்கிலேயர்கள் அடிமைகளாக நடத்தினார்கள்.என்ன தான் நிற வேறுபாடு ஒரு பக்கம் இருந்தாலும் மறு பக்கம் சாதி கட்டமைப்பும் இருந்தது.உதாரணமாக பண்டைய ரோம்ல் வர்ண வேறுபாடு இருந்தது.
![]() |
ரோம் நாட்டின் சாதிய படிநிலை |
◆மத போதகர்
◆அரசர்
◆பிரபுக்கள்
◆வீரர்கள்
◆விவசாயிகள்,வணிகர்கள்
◆அடிமைகள்
இப்படி 6 சாதிய படிநிலைகள் இருந்தன.
உலகின் தலை சிறந்த நாகரிகமான எகிப்தில்,
![]() |
எகிப்து நாட்டின் சாதிய படிநிலை |
★அரசர்
★அரசு அதிகாரிகள்
★எழுத்தாளர்கள்
★கலைஞர்கள்
★விவசாயிகள்,வணிகர்கள்
★அடிமைகள்
என 6 சாதிய படிநிலைகள் இருந்தன.
உலகிற்கு வெடிமருந்தை கொடுத்த சீன நாட்டில்,
![]() |
சீன நாட்டின் சாதிய படிநிலை |
■அரசர்
■அறிஞர்கள்
■கைவினைங்கர்கள்
■வணிகர்கள்
என 4 படி நிலைகள் இருந்தன.
இப்படி உலகின் அனைத்து நாடுகளிலும் சாதிகள் இருந்தது அதே சமயம் அங்கு தீண்டாமையும் இருந்தது அதற்கு கொலோசியம் அரங்கமே இன்றும் ஆதாரம்.இப்படி இருக்க இந்தியாவிலும் மட்டும் தான் சாதி பாகுபாடு இருக்கிறது என கூறுவது பிழையான வாதம் இந்தியாவிலும் சாதிகள் உள்ளதுஎன்பதே சரியான வாதம்.
தமிழ்நாட்டில் சாதிகள் தோற்றம்:
உலகில் உள்ள நாடுகளில் பல சாதிய படிநிலைகள் இருந்தன. ஆனால் அதில் தமிழ் நாட்டில் மட்டும் அன்றைய கால கட்டத்தில் சாதிய படிநிலை இல்லாமல் இருந்தது.சாதி எனும் வட சொல்லுக்கு இணையான தமிழ் சொல் குடி ஆகும்.சங்க காலகட்டத்தில் தமிழகத்தில் குடிகள் இருந்தன.சங்க கால கட்டத்தில் செய்யும் தொழில் பொறுத்து அவர்கள் குடி பெயரானது இருந்தது. அதன் படி வேளாண்மை செய்பவர்கள் வேளாளர் என்றும், போர் செய்பவர்கள் கள்ளர், மறவர் என்றும்,வணிகம் செய்பவர்கள் செட்டியார் என்றும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப குடி பெயர்கள் இருந்தன.இந்த தொழில் அடிப்படையில் ஏற்பட்ட குடிகளானது தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் இப்படி தான் தொழில் மூலம் குடிகள் உருவானது.உலகின் பிற நாடுகளை பொறுத்த வரை செய்யும் தொழிலை பொறுத்து நீ உயர்ந்தவன் நீ தாழ்த்தப்பட்டன் என வேறுபாடு இருந்தது ஆனால் நம் பண்டைய தமிழகத்தில் அந்த வேறுபாடு இல்லை ஆனால் இருந்தது. ஆரம்பத்தில் வேறுபாடு இல்லாமல் இருந்தது பிறகு மெல்ல மெல்ல சங்க கால கட்டத்திலேயே சாதிய ஏற்ற தாழ்வு உருவானது.
பண்டைய தமிழகத்தில் சாதிய ஏற்ற தாழ்வு இல்லை என்பதற்கு ஆதராமாக பல இலக்கிய பாடல்கள் உள்ளன.அதில் அகமண முறை அதிகமாக இருந்தது.இன்றைய கால கட்டத்தில் காதல் திருமணம் சாதி மாற்றி செய்தால் வெட்டு குத்து நடக்கும்.ஆனால் அன்று அப்படி இல்லை குறிஞ்சி நிலத்தில் இருந்தவர் மருத நில பெண்ணை திருமணம் செய்வார்.முல்லை நில பெண் நெய்தல் நில ஆடவரை திருமணம் செய்வாள்.இப்படி எந்த வேறுபடும் இல்லாமல் தங்களுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டு இன்பமாக வாழ்வார்கள்.இதற்கு ஒரு தலை சிறந்த உதாரணம் கரிகால சோழன் மகள் ஒரு நடனமாடும் குல ஆணை திருமணம் செய்து கொள்வார்.ஒரு அரச குடும்பத்தில் பிறந்த பெண் ஒரு சாதாரண ஆடல் குலத்தில் பிறந்த ஆணை திருமணம் செய்து கொண்டார் என்றால் அந்த காலத்தில் இருந்த ஒற்றுமையை நாம் பார்க்க வேண்டும்.
ஆதாரம் குறுந்தொகை 31ம் பாடல்,
"மள்ளர் குழிஇய விழவி
னானும்
மகளிர் தழிஇய துணங்கை"
இந்த பாடல் மூலம் நாம் அறியலாம்.
இப்படி சங்க காலத்தில் என்ன தான் சாதிய வேறுபாடுகள் இல்லாமல் இருந்தாலும் வர்க்க வேறுபாடுகள் சில இடங்களில் இருந்தன அதை நாம் சில சங்க இலக்கிய பாடல் மூலம் அறிய முடியும்.
நற்றிணை 45வது பாடல்,
"இவளே,காணல் நண்ணிய காமர்
சிறுகுடி,
நீல் நிறப் பெருங் கடல் கலங்க
உள்புகு
மீன் ஏறி பரதவர் மக்கள்:நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதுர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல்
மகனே".
இந்த பாடலின் பொருளானது தலைவன் தலைவியிடம் பரிசு ஒன்றினை தருகிறார்.அதை பார்த்த தலைவி நான் பரதவர் எனும் சிறு குடியில் பிறந்த பெண் ஆனால் நீயோ பெரும் செல்வந்தனின் மகன்.உனக்கும் எனக்கும் ஒத்து வராது என மறுத்து விடுவாள்.இந்த பாடல் மூலம் வர்க்க வேறுபாடு இருந்து உள்ளது என நமக்கு தெரிய வருகிறது.இதை அடுத்து நற்றிணை 328 பாடலும் வர்க்க வேறுபாட்டினை பற்றி பாடுகிறது.
இப்படி சங்க காலகட்டத்தில் செய்யும் தொழில் அடிப்படையில் சாதிகள் உருவாகின ஆனால் தீண்டாமை இல்லை ஆனால் வர்க்க வேறுபாடு இருந்தது.
இப்படி சாதிய தீண்டாமை இருந்த நம் தமிழர் பண்பாட்டுக்குள் எப்படி தீண்டாமை வந்தது?
தமிழ் சமூகத்தில் தீண்டாமை:
கல்வி கற்றவன் உயர்ந்தவன் கல்வி கற்காதவனே தாழ்ந்தவன் என்று இருந்த நம் நாகரிகத்தில் அந்நியர்கள் பல மாற்றங்கள் செய்து பிறப்பிலேயே நீ உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற நிலையை உருவாக்கினார்கள்.ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து சிந்து நாதி வழியே உள்ளே வந்த ஆரியர்கள் வட இந்தியாவில் பல சூழ்சிக்க்ள் செய்து அரசர்களை தங்கள் கைக்குள் போட்டி கொண்டு நான்கு வர்ண கோட்பாட்டினை உருவாக்கினார்கள்.இந்த ஆரியர்கள் தமிழகம் வந்த போது அவர்களால் இங்கு கால் வைக்க முடியவில்லை.அவர்களின் கோட்பாடுகளை தமிழ் அரசர்கள் ஏற்று கொள்ளவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் ஆரிய படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் எழுதிய புறநானுறு பாடல் ஆகும்.கல்வி கற்றவன் உயர்ந்தவன் என கூறினார்.
![]() |
இந்திய சாதி படிநிலைகள் |
ஆனால்,இந்த நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை கிபி 3ம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியில் பிராமணர் ஆதிக்கம் அதிகம் ஆனது, பிறகு பல்லவர் ஆட்சியில் மிக அதிகம் ஆனது,பல்லவ மன்னர்கள் பிராமணர்களுக்கு இலவசமாக நிலங்கள் கொடுத்தார்கள்.மேலும் வட மொழி கொண்டே கல்வெட்டும் வெட்டினார்கள்.இப்படி பல்லவர் காலத்தில் அதிகாரத்தை அடைந்த பிராமனர்கள் அதை நிலை நிறுத்தி கொண்டனர்.பிறகு வந்த சோழர், பாண்டியர் ஆட்சியில் அவர்கள் அதிகாரம் குறைக்கப்பட்டாலும் அவர்கள் தமிழகம் எங்கும் பரவினர்.சாதிய பாகுபாடு அதிகம் ஆனது,எந்த பாண்டிய மன்னர் ஆட்சியில் கல்வி கற்றவன் உயர்ந்தவன் என்று சொன்னாரோ அதே பாண்டிய மன்னனின் வழியில் வந்த பிற்கால பாண்டியர்கள் ஆட்சியில் தீண்டாமையை கடைபிடித்தார்கள்.பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக நாயக்கர் அரசும் விஜய நகர அரசும் தமிழ்நாட்டினைஆட்சி செய்தது அந்த சமயத்தில் தீண்டாமை அதன் உச்சத்தில் இருந்தது.ஆரிய பிராமணர்கள் தான் மன்னர்களை கட்டு படுத்தினார்கள்.
சாதியை ஒழிக்க முடியுமா?சாதி தேவையா?
இன்றைய காலத்தில் அனைவரும் சொல்ல கூடிய ஒரு கருத்து சாதியை ஒழித்தால் தமிழ் சமூகம் முன்னேறிவிடும் என்று.சாதி என்பது ஒரு இருமுனை கத்தி ஆகும்.சரியாக பயன்படுத்தினால் நமக்கு சாதகம் இல்லையெனில் பாதகம் தான்.இன்று சாதி மூலம் பல கொலைகள் நடப்பதால் அதை ஒழிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.சாதியை இன்று அல்ல இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒழிக்க முடியாது.காரணம், மனித நாகரிகம் என்று ஒன்று உள்ள வரை இங்கு பாகுபாடுகள் இருக்கும்.உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலை எப்போதும் இருக்கும்.இன்று நாம் சாதி என்ற சொல்லை வேண்டுமானால் ஒழிக்கலாம்.ஆனால் நாளைய தலைமுறையில் மேல் தட்டு மக்கள், இடை தட்டு மக்கள்,ஏழை மக்கள்,பிச்சைக்காரன் என நான்கு பிரிவு உருவாகும்.சாதி என்ற பெயர் ஒழியுமே ஒழியே அந்த கட்டமைப்பும் வேறுபடும் மனித நாகரிகம் இருக்கும் வரை இருக்கும்.மேலும் சாதி தேவையா என்று பார்த்தால் தேவை தான்.நம் வரலாறு அழிக்கப்படாமல் இருக்க சாதி நிச்சயம் தேவை.ஆனால் சாதிக்கு இடையே இருக்கும் தீண்டாமை நமக்கு தேவை இல்லை.ஆனால் இந்த தீண்டாமை என்றும் ஒழியாது இன்று நீ தாழ்ந்த சாதி என்று சொல்பவன் நூறு ஆண்டுகளுக்கு பிறகு நீ ஏழை என்று ஒதுக்குவான்.எனவே இந்த நிலை என்றும் மாறாது,இதை யாராலும் ஒழிக்க முடியாது.சாதியை ஒழிப்பேன் என கூறுபவர்கள் சாதியை வைத்து பணம் தான் சம்பாதிப்பார்கள் ஆனால் சாதியை ஒழிக்க மாட்டார்கள். இதை சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
0 Comments