சோழர் கால தீண்டாமையும், சாதிய கொடுமைகளும்

 சோழர்கள்:

       இந்திய வரலாறு இல்லை உலக வரலாறு எழுதும் போது அதில் சோழர்களை தவிர்த்து விட்டு வரலாறு எழுதினால் அந்த வரலாறு முழுமை பெறாது, ஏனென்றால் சோழர்கள் வரலாற்றில் முக்கியமான ஒரு அரச மரபினர் ஆவார்கள்.சோழர்கள் என்றதும் அவர்கள் கட்டிய கல்லணை, தஞ்சை பெரிய கோவில்,வீராணம் ஏரி,கங்கை கொண்ட சோழ புரம் இது தான் நியாபகம் வரும்.மேலும் அவர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை வென்றதும்,அவர்களின் வீரமும் நமக்கு நியாபகம் வரும்.ஆனால் சோழர்கள் ஆட்சியில் தமிழகம் என்னதான் வளர்ச்சி அடைந்து அவர்களின் புகழுக்கு சான்றாக இருந்தாலும் அவர்கள் ஆட்சியிலும் தீண்டாமையும் சாதிய பாகுபாடுகளும் இருந்தது பொதுவாக தீண்டாமை மற்றும் சாதிய ஏற்ற தாழ்வு என்றதும் நாம் நேராக விஜயநகர காலகட்டதிற்கு சென்று விடுவோம். அவர்கள்  ஆட்சியில் தீண்டாமை உச்சத்தில் இருந்தது.ஆனால் அவர்கள் ஆட்சியில் தான் தீண்டாமையும், சாதிய பாகுபாடும் உருவானது என்பது பொய் ஆகும்.சோழர்கள் ஆட்சியிலேயே தமிழகத்தில் தீண்டாமை இருந்துள்ளது.அதை நாம் பல கல்வெட்டுகள் மூலமாக அறியமுடியும்.சோழர் கால ஆட்சியில் இருந்த சாதிய தீண்டாமை பற்றியும் ஏற்ற தாழ்வு பற்றியும் பார்க்கலாம்.

சோழர்
சோழர்





 ●அனுலோமா மற்றும் பிரதிலோமா:

   
     அனுலோமா மற்றும் பிரத்திலோமா என்பது மனுஸ்மிருதியில் உள்ள ஒரு கலப்பின பிறப்பு ஆகும்.சாதி மாற்றி திருமணம் செய்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை அனுலோமா மற்றும் பிரதிலோமா என்பார்கள்.

இதில் அனுலோமா என்பது உயர் சாதி ஆணுக்கும், கீழ் சாதி பெண்ணுக்கும் பிறந்த கலப்பினமக்கள் மனுஸ்மிருத்தி படி அனுலோமா ஆவார்கள்.

பிரதிலோமா என்பது உயர் சாதி பெண்ணுக்கும் தாழ்ந்த சாதி ஆணுக்கும் பிறந்த கலப்பின மக்களை மனுஸ்மிருத்தி படி பிரதிலோமா என்பார்கள்.

ஆரியர்களின் இந்த அனுலோமா மற்றும் பிரதிலோமா என்ற படி நிலை சோழர் ஆட்சியில் இருந்தது

இதில் அனுலோமா பிரிவில் சில சாதிகள் உள்ளன அவை,பஞ்சகம்மாளர்கள், பாரசிவர்,பதினெண்விஷயத்தார்கள் என்ற வணிக குழுவில் உள்ள பல வியபாரிகளில் பொற்கொல்லர் என்பதும் ஒருவர் என்பது புலப்படுகிறது.

அடுத்ததாக பிரதிலோமா பிரிவில் உத்கிரிஸ்ட் ஆயோகவர் என்ற தறியாளர், பட்டினவர், சிவ படவர், தீண்டாதார் என்பவர்கள் இருந்துள்ளனர்.

இந்த இரண்டு இரண்டு பிரிவில் இருந்த சாதியினரும் சோழர்,பல்லவர் மற்றும் பாண்டியர் காலத்தில் சாமூகத்தில் நல்ல நிலையில் இருந்தனர். ஆனால் பிரதிலோமா பிரிவில் இருந்த தீண்டாதார் என்ற பிரிவினர் பல கொடுமைகளை சந்தித்தினர்.

தீண்டாதார்:

 தீண்டாதார் என்பவர்கள் சூத்திரசாதி ஆண்களுக்கும், உயர் சாதி பெண்களுக்கும் பிறந்தவர்கள்.இவர்களுக்கு சண்டாளன்,சாதிசண்டாளன், நீச குலத்தான், கொடும்பாதகன், சம்சர்க்கப்பதிதர் என்ற பெயர்கள் உண்டு.இவர்கள் குறிப்பாக பிராமணர் பெண்ணுக்கும், சூத்திரர் ஆணுக்கும் பிறந்தவர்கள் ஆவார்கள்.இவர்களை பற்றிய குறிப்பு "முன்னாட்சாதி சண்டாளன் மற்றொருதன்" என்று திருக்களாத்தி புராணத்தில் வந்துள்ளதை அறிய முடிகிறது.

தீண்டாதார்கள் வாழ்ந்துள்ள பகுதியை தீண்டா சேரி என்று அழைத்தனர்.முதலாம் ராச ராச சோழரின் தஞ்சாவூர் கல்வெட்டில் பல சேரிகள் பெயர்கள் வந்துள்ளது. அதில் தீண்டா சேரி என்ற பெயரும் வரும்.
பாண்டிசேரியில் உள்ள பாகூர் மூலேஸ்வர் திருக்கோவிலில் முதலாம் ராஜேந்திர சோழரின் 16ம் ஆண்டு (கிபி 1023) கல்வெட்டில் தீண்டதகாதவர் பற்றி செய்தி உள்ளது.அதில் இவ்வூரில் உள்ள ஏரியின் பராமரிப்புக்கு வேண்டிய வரி வசூல் செய்கிறபொழுது தீண்டதகாதவரை நீக்கிவிட்டு பத்து வயசுக்கு மேல் உள்ளவர்களையும்,என்பது வயசுக்கு கீழ் உள்ளவர்களையும் கணக்கெடுத்து அவர்களிடம் வரி வசூலித்து உள்ளனர்.இதை தீண்டாதாரொழிய நீக்கி நின்றாரில் பத்து வயசுக்குமேல் எண்பது வயசுக்கு கீழ்பட்டாரை மூதலெடுத்து என்ற கல்வெட்டு வரிகள் மூலம் அறிய முடியும்.ஒரு சமூகத்தினரை தீண்டாதார் என்று ஒதுக்கி தீண்டாமையை கடைபிடித்து உள்ளனர் சோழர் ஆட்சியில்.

மேலும் கலப்பினமக்கள் என்று சொல்ல கூடிய பஞ்சகம்மாளர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டது.
கோயமுத்தூரில் வாழ்ந்துள்ள கம்மாளர்கள் தங்களுக்கு என்று சத்திரிய சிகாமணி என்ற ஊரில் சபை ஒன்று வைத்து இருந்தார்கள்.தங்களது வீடுகளில் நடைபெறுகின்ற நன்மைதீமைகளுக்கு இரட்டைசங்கு ஊதிக்கொள்வதற்கும், பெரியமேலம்கொட்டிகொள்வதற்கும்.புறப்படவேண்டிய இடங்களுக்கு பாதரக்சை அணிந்துகொள்வதற்கும், வீடுகளில் சாந்திட்டு கொள்வதற்கும்
அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி உள்ளனர்.இதில் சிவபிராமணர், ஆண்டார்கள், வெள்ளாளர் உவச்சர் ஆகியோர்களுக்கு வீட்டில் இரட்டை நிலை கதவு வைத்து கொள்ள,செங்கழுநீர் பூவைகொண்டு வாசிகை தோள் மாலை வைத்து கொள்ளும் போன்ற உரிமைகள் பஞ்சகம்மாளர்களுக்கு கொடுக்க வில்லை.இதிலிருந்து சாதிக்கொருநீதி,ஆளுக்கொரு நீதி இருந்துள்ளதை அறிய முடிகிறது. அப்படியென்றால் சமூகத்தில் ஏற்ற தாழ்வு தாராளமாக இருந்துள்ளதும் தெரியவருகிறது.

கலப்பினமக்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையை பார்க்கும் பொழுது அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு அரசிடம் அஞ்சி கெஞ்சி அனுமதி வாங்கி உள்ளனர்.

அடுத்ததாக வேளச்சேரியில் உள்ள ராஜேந்திர சோழன் 6ம் ஆண்டு கல்வெட்டில் பிராமணர்களுக்கு கீழ்பட்டுள்ள சாதியார்கள் பூமியை விற்பதற்கு தகுதியற்றவர்கள் என்று வந்துள்ளது.இதன் மூலம் சோழர் காலத்தில் பிராமணர் உயர்ந்தோர் மற்றோர் கீழ் சாதியினர் என்ற பாகுபாடு இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.

அடுத்து ஆச்சாள்புரத்தில் உள்ள இரண்டாம் ராசாதி ராசர் 14ம் ஆண்டு கல்வெட்டில் எந்தெந்த சாதியினர் எந்தெந்த தொழில் செய்ய வேண்டும் எந்தெந்த தொழில் செய்ய கூடாது என்று வரையருத்துள்ளதை கொண்டு சோழர் காலத்தில் நான்கு வருண கோட்பாடு தீவிரமாக பின்பற்றபட்டது என்பதும் தெளிவாக தெரிய வருகிறது. குறிப்பாக பிராமணர்கள் பெருங்குடி என்றும்,எருதுகட்டி உழவுசெய்யமாட்டார்கள் என்றும் இவற்றுடன் பணிசெய்மக்கள் வேளிராகவோ,அரசராகவோ வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது.

பிற்கால சோழர் ஆட்சியில் சமூகத்தில் சாதிய ஏற்ற தாழ்வு இருந்தது. இதை மேற்கண்ட தரவுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். பல்லவர் ஆட்சியில் நான்கு வருண கோட்பாடு தமிழகத்தில் உருவானது பிறகு வந்த சோழர்கள் ஆட்சியில் அது நடைமுறை படுத்தபட்டு விஜயநகர ஆட்சியில் சட்டமாகவே கொண்டு வரபட்டது.மேலும் சோழர்கள் ஆட்சியில் கிடைக்கும் சில கல்வெட்டுகளில் நேரடியாகவே சாதிய ஏற்ற தாழ்வுகள் பற்றி உள்ளன.

குலோத்துங்க சோழனின் கல்வெட்டு:

       மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் சோழ நாடு வீழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தது. சோழனுக்கு எதிராக சிற்றரசர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.இந்நிலையில் குலோத்துங்க சோழன் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்.சோழருக்கு கீழ் இருந்த அரையர்களுடன் ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அது என்னவென்றால் நீங்கள் வாணகோவராயர்கள் மற்றும் காடவராயர்கள் உடன் எந்த ஒரு தொடர்பும் வைத்து கொள்ள கூடாது மீறி உறவு வைத்து கொண்டால் பறையர் சமூகத்தரின் செருப்பை எடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டு இருப்பார். தன் சொந்த நாட்டு குடிகளை இழிவுபடுத்தி போட பட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு ஒப்பந்தம் அல்லவா....எவ்வளவு சாதிய வேறுபாடுகள் அந்த காலகட்டத்தில் இருந்திருந்தால் இப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பார்.இந்த செய்தியானது திருவண்ணாமலை உடையப்பனார் கோவில் கல்வெட்டில் உள்ளது.
Inscription




மேலும் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் சில தண்டனைகள் இருந்தன. அது என்னவென்றால் அரச கட்டளையை மீறுவோர் தங்கள் மனைவியை பறையருக்கு கொடுக்க வேண்டும் என சட்டம் இருந்தது.தன் சொந்த குடிகளை இழிவுபடுத்தி போடப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.

Cholar history



சோழர்கள் ஆட்சியில் சாதிய ஏற்ற தாழ்வும் சாதிய தீண்டாமையும் இருந்தது என்பதற்கு இதெல்லாம் உதாரணம் ஆகும்.இன்று சிலர் சாதிய ஏற்ற தாழ்வும் தீண்டாமையும் விஜயநகர ஆட்சியில் தான் வந்தது என கூறுவார்கள்.ஆனால் அது பொய் ஆகும் பல்லவர்கள் ஆட்சியிலேயே நான்கு வருண கோட்பாடு வந்து விட்டது.கால போக்கில் அதிகாரத்தை அடைந்த கும்பல் விஜய நகர அரசு ஆட்சியில் அதிகார உச்சியில் இருந்தனர்.இதனால் தாங்கள் விரும்பிய முறையை சட்டமாக கொண்டு வந்து குடிகளை துன்ப படுத்தினார்கள்.

இரவு பகல், வட துருவம் தென் துருவம் என அனைத்திலும் இரண்டு பக்கங்கள் இருக்கும்.அது போல தான் சோழர் ஆட்சியிலும் இரண்டு பக்கங்கள் இருந்தன.ஒரு பக்கம் பொற்காலம் ஆகும்.ஏரிகள் உருவாகின, கோவில்கள் கட்ட பட்டன, பசி பஞ்சம் இல்லை ஆனால் மறு பக்கத்தில் தீண்டாமை இருந்தது.

எனவே வரலாறு பேசும் போது ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காமல் இரு பக்கத்தையும் பார்க்க வேண்டும்.அப்பொழுது தான் உண்மை தெரிய வரும்.இனி வரும் காலங்களில் வரலாறை தெளிவாக படித்து உண்மை வரலாறை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்.





Post a Comment

0 Comments