தமிழகத்தில் பௌத்தம் புத்த மதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

 பௌத்த மாதம்:



                பௌத்த மதம் உலகில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்பற்ற படும் ஒரு பழமையான மதம் பௌத்த மதம் ஆகும். இன்று இந்தியா,சீனா,மியான்மார்,இலங்கை,வியட்நாம்,சீனா,ஜப்பான்,கம்போடியா,மலேசியா,தாய்லாந்து என பல நாடுகளில் பின்பற்ற படும் இந்த பௌத்த மதம் கௌதம புத்தாரால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோற்றுவிக்க பட்ட ஒரு மதம் ஆகும். உலகில் உள்ள மற்ற மதங்களில் கடவுள் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. அதாவது கடவுள் தான் உலகையும்,உயிரையும் படைத்தார் என்ற கூற்று அனைத்து மதங்களிலும் உள்ளன. ஆனால் பௌத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர் கடவுள் இந்த உலகை படைக்கவில்லை எனவும்,வேதங்களுக்கு எதிராகவும் ஆசையே அனைத்திற்க்கும் காரணம் ஆசையை துறக்க வேண்டும் என கூறி கடவுள் மறுப்பு கொள்கையுடன் உருவான ஒரு மதம் தான் பௌத்த மதம். இதனால் தான் இந்த மதத்தை நாத்திக மதம் என அழைப்பார்கள்.

buddha histroy




பௌத்த மதத்தின் தோற்றம்:

 புத்த மதம் கௌதம புத்தர் என்பவரால் கி. மு 5 ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கபட்ட மதம் ஆகும். கிறிஸ்து பிறப்பதற்க்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நேபாளத்தில்  லும்பினி எனும் ஊரில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுத்தோதானா மற்றும் மாயாதேவி என்பருக்கு பிறந்தார். இவர் பிறந்த உடனே அந்த நாட்டில் இருந்த முனிவர்கள் சித்தார்த்த கௌதமர் வருங்காலத்தில் ஒரு துறவியாக மாறுவார் எனவும் அரச பதவியை துறந்து விடுவார் எனவும் கூறினார்கள்,இதனால் புத்தர் சிறு வயதில் இருந்தே அரண்மைக்குள்ளே வசித்து வந்தார். இவர் தன் 16 ம் வயதில் யசோதரை எனும் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுலன் எனும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. 

சித்தார்த்த கௌதமர் தன்னுடைய 29 ம் வயதில் அரண்மனையை விட்டு வெளியேறினார். வெளியே சென்ற பிறகு அவர் 

✅ஒரு வயதான முதிய கிழவர் 

ஒரு நோயாளி 

ஒரு அழுகி கொண்டு இருந்த பிணம் 

ஒரு துறவி 

ஆகிய நான்கு பேரை பார்த்து அவர் வெளி உலகத்தை புரிந்து கொண்டார். இதன் பிறகே கௌதம புத்தர் வாழ்வின் ரகசியத்தை அறிந்து கொள்ள தன் நாடு,மனைவி,மக்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு துறவியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.கானகம் நோக்கி சென்ற புத்தர் பல நாட்கள் குளிக்காமல் தவத்தில் இருந்தார். இவரின் தவத்தை கண்டு இவருக்கு பின்பு ஆரம்பத்தில் 5 சீடர்கள் கிடைத்தனர். இதன் பிறகு சாரநாத் எனும் இடத்தில் ஐந்து பேரை முதன் முறையாக சீடராக ஏற்று கொண்டு அவர்களுக்கு தன் நன்னெறிகளை புகட்டினார். 

இதன் பிறகு தன் 35 ம் வயதில் கையை இன்றிய பீகாரில் சுஜாதை எனும் பெண்ணிடம் மோர் வாங்கி குடித்து விட்டு போதி மரத்தின் அடியில் அமர்ந்தார். இதன் பின்பு ஞான நிலை  அடையும் வரை அங்கே இருந்தார். இதன் பிறகு துன்பம் மற்றும் கவலைக்கு ஆன காரணத்தை கண்டறிந்தார். ஆசைகளை துறந்தால் துன்பமும்,கவலையும் இருக்காது என கூறினார். இதன் பிறகு அடுத்த 45 வருடத்தில் புத்தரின் கொள்கையை ஏற்று பலரும் அவர் பின் சென்றனர்.இந்த சித்தார்த்த கௌதமர் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகள் கழித்தே புத்தரின் வரலாறு எழுதபட்டது. 

buddha histroy in tamil


புத்தக மதத்தின் பரவல்:

       புத்தர் இறந்து பல ஆண்டுகள் கழித்து புத்தரின் வரலாறு எழுத பட்டது. இதன் பிறகு பல புத்த துறவிகள் மூலம் புத்த மதம் வளர்க்கப்பட்டது. கடவுள் இல்லை பலி கொடுக்க கூடாது,புலால் உண்ணாமை,வேத மறுப்பு ஆகிய கொள்கைகளை பரப்பிய புத்தரே அவரின் மறைவிற்க்கு பிறகு அவர் கடவுளாக மாற்றபட்டார். இதன் பிறகு கி. மு 3 ம் நூற்றாண்டில் மௌரிய சாம்ராஜியத்தை நிலைநிறுத்திய அசோகர் கலிங்க போருக்கு பிறகு புத்த மதத்தை தழுவினார். அசோகர் பௌத்த மதத்தை தழுவிய பிறகு பௌத்த மத கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப பல பௌத்த துறவிகளை பல நாடுகளுக்கு அனுப்பினார். இந்த அசோகரின் ஆட்சியில் தான் பௌத்த மதம் தமிழகத்தில் பரவியது. அசோகரின் ஆட்சியில் அசோகனது மகன் மகிந்தர் இலங்கை சென்று பௌத்த மதத்தை பரப்பினார்.அப்படி அவர்கள் இலங்கை சென்ற சமயத்தில் தமிழகம் வந்து இங்கேயும் பௌத்த மத கொள்கைகளை பரப்பி இருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக கிபி 640 ல் தமிழகம் வந்த சீனா பயணி யுவான் சுவாங் குறிப்பில் பாண்டிய நாட்டின் மதுரை நகரில் அசோகறது உடன் பிறந்தவரான மகிந்தனால் கட்ட பட்ட ஒரு பௌத்த பள்ளி இருந்ததாக குறிப்பிடுகிறார்.மேலும் பாண்டிய நாடு மற்றும் இலங்கையில் பாறையில் செதுக்கபட்ட படுக்கைகள் உள்ளன. இரண்டு பகுதியில் இருக்கும் படுக்கைகளும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்,

இப்படி அசோகரது ஆட்சியில் பௌத்த மதம் உலகம் முழுவதும் பரப்ப பட்டது. வடக்கே மௌரிய அரசு வீழந்த பிறகு புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணர் மூலமாக சுங்க அரச மரபு உருவானது. இவர் மௌரிய அரசின் மன்னறை கொன்று சுங்க அரச மரபை தோற்றுவித்தார். இவரின் ஆட்சியில் புத்த மதத்திறக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் இவரின் ஆட்சியில் தான் பிராமணர்கள் தங்கள் வரலாறை எழுத தொடங்கினார்கள். கடவுள் மறுப்பு பேசிய புத்தரையே இந்து மத கடவுளான கிருஷணரின் ஒரு அவதாரம் என வரலாறை மாற்றி எழுதினார்கள்.

இந்தியாவில் புத்த மதத்தின் வீழ்ச்சி: 

    பௌத்த மதம் இலங்கை,சீனா,கொரியா என பல நாடுகளில் பரவி இருந்தாலும் அந்த மதம் உருவான நம் இந்திய நாட்டில் வீழ்ச்சி அடைந்தது. மேலும் இந்த மதம் மக்களிடையே மதிப்பையும்,மரியாதையையும் பெற்று இருந்தாலும் பரவ முடியவில்லை. குறிப்பாக நம் தமிழ்நாட்டில் பௌத்த காப்பியங்கள் வந்து இருந்தாலும் பௌத்த பள்ளிகள்,துறவிகள் இருந்தாலும் பௌத்த மதத்தால் வளர இயலவில்லை. காரணம் தமிழர்களின் முன்னோர் வழிபாட்டு முறை வழுவாக இருந்தது. களப்பிரர்கள் மற்றும் பல்லவர்கள்  ஆட்சியில் பௌத்த  மதம் வளர்ந்திருந்தாலும் அவர்களுக்கு பிறகு சேர சோழ பாண்டியர் ஆட்சியில் வழுவிழக்க தொடங்கியது. இதற்க்கு ஒரு பெரிய காரணம் பக்தி இலக்கியங்களின் வளர்ச்சி ஆகும்,அப்பர்,சமந்தர்,திருஞானசம்பந்தர் நாயன்மார்கள் மூலமாக சைவ,வைணவ நெறிகள் மக்களிடையே அதிகம் சென்றது. இதன் விளைவு பௌத்த மதம் வீழ தொடங்கியது. இதுமட்டுமில்லாமல் சமணம்,ஆசிவாகம் ஆகிய மாதங்களும் வீழ்ச்சி அடைந்தன. ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆசிவாகம்,முன்னோர் வழிபாடு,சமணம்,பௌத்தம் ஆகிய சமயங்கள் சைவ,வைணவ சமயங்களால் விழுங்கபட்டது. பிறகு சைவ,வைணவ சமயங்கள் ஒன்றாக இணைந்து இந்து என்ற மதம் உருவாக்கபட்டது. பௌத்த மதம்,சமணம்,ஆசிவாக்கம் ஆகிய மதத்தின் சாயல்கள் இன்றும் இந்து மதத்தில் உள்ளன. பௌத்த மதம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் கிழக்கு ஆசிய நாடுகளில் பாரவி இன்று 40 கோடிக்கும் அதிகமாவர்களால் பின்பற்றபட்டும் வருகிறது 


✅யார் இந்த சேர சோழ பாண்டியர்கள் அவர்கள் உருவான வரலாறு

Post a Comment

0 Comments