யார் இந்த இசை வேளாளர்கள் வாழ்வும் வரலாறும்

இசை வேளாளர் வரலாறு:

            இசை வேளாளர்கள் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் ஆவார்கள்.1971 ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி சின்னமேளம்,பெரிய மேளம்,நட்டுவாங்கம் ஆகிய மூன்று சாதியினரையும் ஒன்றாக சேர்த்து இசை வேளாளர் என அறிவித்தார். இன்று பலரும் கருணாநிதி சின்னமேளம் என்றும் அவர் தெலுங்கர் என்றும் கூறி வருகின்றனர்.இதுமட்டுமில்லாமல் இசை வேளாளர் சாதியே ஒரு தெலுங்கு சாதி தான் எனவும் கூறி வருகின்றனர். இது உண்மை தான் ஆனால் இதில் ஒரு மிக பெரிய பொய் இருக்கிறது அது என்னவென்றும் மேலும் இசை வேளாளர் சமூகத்தின் வரலாறையும் பார்க்கலாம்.

தேவரடியார்கள்

 


இசை  வேளாளர்:

    இசை வேளாளர் சதியில் மூன்று உட்பிரிவுகள் உண்டு அவை பெரிய மேளம்,சின்னமேளம்,நட்டுவாங்கம்.இதில் பெரிய மேளம் என்பது தமிழ் சாதி ஆகும். சின்ன மேளம் என்பது தெலுங்கு சாதி ஆகும். பெரிய மேளம் என்னும் சாதி சங்க காலத்தில் இல்லை மாறாக அது கிபி 10ம் நூற்றாண்டுக்கு பிறகு உருவாக்கபட்ட ஒரு சாதி ஆகும். ராஜ ராஜ சோழன் ஆட்சியில் தேவரடியார் முறை மிகவும் பிரபலமாக இருந்தது. பல்லவர் ஆட்சியில் உருவான இந்த முறை பிற்கால சோழர் ஆட்சியில் புகழின் உயரத்தில் இருந்தது. தேவரடியார் என்பது இறைவனுக்காக தன்னை அற்பணித்து கொண்டவர் என்று பொருள் ஆகும். சோழர் காலத்தில் குறிப்பாக ராஜ ராஜ சோழன் ஆட்சியில் பலர் விரும்பி தேவரடியாராக மாறினார்கள். மேலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தபட்டனர். 

  பிற்கால சோழர் ஆட்சிக்கு பிறகு சாளுக்கிய சோழர்கள் ஆட்சிக்கு வந்தனர் இவர்கள் ஆட்சியில் தேவரடியார்களின் மதிப்பு சமூகத்தில் குறைய ஆரம்பித்தது. காரணம் தேவரடியார் என்பது இறைவனுக்காக தன்னை அற்பணித்து கொண்டவர்கள் ஆவார்கள். ஆனால் சாளுக்கிய சோழர்கள் ஆட்சியில் ஏற்பட்ட பல பஞ்சங்கள் காரணமாக காசுக்காக தங்களை கோவிலுக்கு விற்றுகொண்டனர். இதை நாம் சோழர் கால கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.இப்படி காசுக்காக தங்களை அற்பணித்து கொண்ட காரணத்தால் அவர்களின் மதிப்பும் மரியாதையும் குறைய தொடங்கின.பிறகு ஏற்பட்ட பல ஆட்சி மாற்றங்கள் காரணமாக இவர்கள் மேலும் இழிவுபடுத்தபட்டனர். 

நாயக்கர் ஆட்சியில் தேவரடியார்கள் கோவில் திருப்பணிகளை தவிர பாலியல் தொழிலுக்கும் ஈடுபடுத்தபட்டனர்.மேலும் தேவரடியார்களுக்கு போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தால் தேவரடியார்கள் கோவிலை விட்டு வெளியேறி தெருக்களில் நடனமாடி தங்கள் வாழ்வாதாரத்தை பார்த்து கொண்டனர்.இந்த தேவரடியார்களில் பல சாதியினரும் இருந்தனரும். தேவரடியார்களின் மதிப்பு குறையவும் இவர்கள் சமூகத்தால் ஓரம்கட்டபட்டனர்,இப்படி ஓரம்கட்டபட்டவர்கள் தான் பெரிய மேளக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் கோவிலை விட்டு வெளியேறி நடனம்,இசை வாசித்தல் மற்றும் சுப நிகழ்வுகளில் இசை வாசித்தல் போன்ற பல தொழில்கள் செய்தனர். இவை நடந்தது கிபி 16,17ம் நூற்றாண்டுகள் ஆகும். இந்த காலகட்டதில் தான் ஆந்திரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வேற்று மொழி பேசுபவர்கள் குடியேற ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் தெலுங்கு பேசும் மேளக்கார்களும் குடியேற ஆரம்பித்தனர். தெலுங்கு மேளக்காரர் மற்றும் தமிழ் தேவரடியார்கள் ஆகியோரின் தொழில்கள் அந்த காலத்தில் ஒரே மாறியாக இருந்த காரணத்தால் இருவரும் ஒன்றாகினார். மேலும் இவர்கள் தஞ்சாவூர் பகுதியில் அதிகம் குடியேற ஆரம்பித்தனர். இதனால் இவர்கள் தஞ்சாவூர் மேளக்காரர் எனவும் அழைக்கபட்டனர். 

பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இவர்கள் ஆங்கிலேயர்களால் பாலியல் தொழில் ஈடுபடுத்த பட்டனர். இதன் விளைவு ஆங்கிலேயர்களுக்கு பால்வினை நோய்கள் வர தொடங்கின. தங்களுக்கு நோய் வர காரணம் தேவரடியார்கள் தான் என கூறி தேவரடியார் முறை ஓழிக்கவேண்டும் என முடிவு செய்தனர். கிபி 19 ம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மிசினரிகள் மூலம் போராட்டங்கள் நடந்தன.20 ம் நூற்றாண்டில் முத்து லெட்சுமி அம்மையார் மூலம் இம்முறை ஒழிக்கபட்டது. இதன் பிறகு இவர்கள் தங்களை இசை வேளாளர்கள் என கூறிக்கொண்டனர். அந்த காலகட்டதில் இவர்களும் வெள்ளாளர்கள் போலவே பிள்ளை போன்ற பட்ட பெயர்களை பயன்படுத்தினார்கள். 

தேவரடியார் வரலாறு


இந்த தேவரடியார்களால் பாதுகாக்க பட்ட ஒரு கலை தான் பரதநாட்டியம் எனும் சதிராட்டம். தேவரடியார் ஓழிப்புக்கு பிறகு சதிராட்டம் ஒரு இழிவான கலையாக பார்க்கபட்டது பலரும் ஒதுக்கினார்கள். ஆனால் பிராமணர்கள் சதிராட்டத்தை கையில் எடுத்து அதற்கு பரதநாட்டியம் எனும் பெயர் மாற்றம் செய்து அழியாவிடாமல் பாதுகாத்து ஒரு உயரிய கலையாக மாற்றினார்கள். சதிராட்டம் பிராமணர் கைக்கு சென்ற பிறகு பல தேவரடியார்கள் எதிர்பும் தெரிவித்தனர். 


தேவரடியார்கள் இசை வேளாளர்கள் ஆனா பிறகு அதில் தமிழர்களும் தெலுங்கர்களும் இருந்தனர். அதில் பெரிய மேளம் பிரிவினர் தமிழ் பேசும் தமிழர்கள் ஆவார்கள். சின்ன மேளம் பிரிவினர் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆவார்கள்.பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியால் தமிழரையும்,தெலுங்கரையும் ஒன்றாக இணைத்து குழப்பம் ஏற்படுத்தினார்கள். இந்த குழப்பம் பல சாதிகளில் உள்ளன வாக்கு வங்கிக்காக அரசியல் லாபத்திற்காக வரலாற்றை திரித்து தமிழர் தெலுங்கர் என அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே சாதிகளாக மாற்றிவிட்டனர்  

Post a Comment

0 Comments